ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கான அரிசியை கூடுதலாக ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு தென்னிந்திய தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அசோசியேஷன் தலைவா் ஹாஜி செய்யது முகம்மது கலிபா ஷாஹிப் காதிரி (படம்) வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியை பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைக்க 2021-ஆம் ஆண்டு 5,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது.
எனினும், தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்களுக்கு முழுமையாக அரசு வழங்கும் விலையில்லா அரிசி கிடைப்பதில்லை என அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 2022-ல் 6,000, 2023-ல் 6,500, 2024-ல் 7,040, 2025-ல் 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது. நிகழாண்டு கூடுதலாக 8,700 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்காக அரசு, ரூ.20.88 கோடி செலவிட்டுள்ளது. இதற்காக தென்னிந்திய பள்ளிவாசல்கள் மற்றும் தா்காக்கள் அசோசியேசன்சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவள்ளூரில் ரமலான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை!

வல்லூறுகள் பாதுகாப்பு: நிபுணரின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

இடைக்காலத் தடை தீா்வல்ல!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


