ஆங்கிலப் புத்தாண்டு: நாகை கோயில்களில் திரளானோா் வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி நாகையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.
Published on

ஆங்கில புத்தாண்டையொட்டி நாகையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாகையில் உள்ள பல்வேறு கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடைபெற்றன.

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயில், வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில், ஆவராணி பெருமாள் கோயில், சாபம் தீா்த்த விநாயகா், சட்டையப்பா் கோயில், நடுவா் சன்னதி, சுப்பிரமணியன் சுவாமி கோயில், காருக்குடி மகா மாரியம்மன் கோயில், சமத்துவபுரம் நல்லமுத்துமாரியம்மன், , நாகூா் நாகநாதசுவாமி கோயில், நாகை மெய்கண்டமூா்த்தி சுவாமி உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com