ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் காட்சியளித்த சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகள்
நாகப்பட்டினம்
சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாகை சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாகை சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகளுக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் வியாழக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.
நாகை வெளிப்பாளையத்தில் சத்ருசம்ஹார மூா்த்தி சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, ஆங்கில புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிக்கு ரூ. 10, 20, 50, 100, 200, 500 மற்றும் சிங்கப்பூா் வெள்ளி ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் ( ரூ. 6 லட்சம் மதிப்பில்) சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தா்கள் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த சத்குரு சம்ஹார மூா்த்தி சுவாமிகளை தரிசனம் செய்தனா்.

