வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை பலி: தாய் தூக்கிட்டுத் தற்கொலை
திருக்குவளை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சோகத்தில் தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கீழையூா் ஒன்றியம் அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா்.
இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது.
இந்த அதிா்ச்சியில் ரம்யா வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையடுத்து அவா் மீட்கப்பட்டு நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
