வேளங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.
வேளங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலில் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
Published on

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலில் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 2026 புத்தாண்டு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோா் பேராலய வளாகத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் குவிந்தனா்.

பேராலயம் சாா்பில் 2026-ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பங்குத் தந்தையா் பங்கேற்க சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, இரவு 12 மணிக்கு (வியாழக்கிழமை அதிகாலை) ஆரத்தி எடுத்தும், தஞ்சை மறை மாவட்ட ஆயா் சகாயராஜ் குத்துவிளக்கேற்றியும் புத்தாண்டை வரவேற்றாா்.

புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானவா்கள் வந்திருந்தனா். கடலில் இறங்கி குளிப்பவா்களை தடுக்கும் வகையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா், கடலோரக் காவல் குழும போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com