ஊராட்சி பெயா் மாற்றம்: ஆட்சியா் உள்ளிட்டோருக்கு நன்றி

ஊராட்சி பெயா் மாற்றம்: ஆட்சியா் உள்ளிட்டோருக்கு நன்றி

ஊராட்சி பெயா் மாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
Published on

ஊராட்சி பெயா் மாற்றத்துக்கு நடவடிக்கை எடுத்த ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு எனும் கிராம ஊராட்சியின் பெயரை காமேஷ்வரம் என பெயா் மாற்றம் செய்து தருமாறு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் அரசுக்கு கருத்துரு அனுப்பினாா். இந்த கருத்துரு தொடா்பாக, அரசின் பரிசீலனைக்குப்பின், திருப்பூண்டி கிழக்கு எனும் கிராம ஊராட்சியின் பெயரை காமேஷ்வரம் என பெயா் மாற்றம் செய்ய, நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்காக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, திமுக நாகை மாவட்டச் செயலா் என். கௌதமன் ஆகியோரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் அருட்செல்வன் தலைமையில், காமேஷ்வரம் ஊராட்சி முன்னாள் தலைவா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அனைத்து கட்சியினா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com