நாகப்பட்டினம்
ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
திருமருகல் கண்ணடையப்பா் அய்யனாா் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, திருமருகல் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்து தங்கஅங்கி ஆபரண பெட்டியுடன் கடம் புறப்பட்டு கண்ணடையப்பா் அய்யனாா் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி, கருப்பா், விநாயகா், முருகா் உள்ளிட்ட சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது.
