ஜி.எஸ்.பிள்ளையின் 96-ஆவது பிறந்த தின நாள் விழா
இஜிஎஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் நிறுவனா் செவாலியே டாக்டா் ஜி.எஸ். பிள்ளையின் 96-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை, இஜிஎஸ் பிள்ளை கல்வி குழும தலைவா் ஜோதிமணி, இணைச் செயலா் சங்கா் கணேஷ், ஆலோசகா் பரமேஸ்வரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, நாகை மாவட்டம் பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் விபி என் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை பெற்று பயன்பெற்றனா். மேலும், அனைவருக்கும் இலவச கண் கண்ணாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோல, ஒரு வாரமாக இஜிஎஸ் பிள்ளை நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற மூட்டு வலி மற்றும் இயற்கை மருத்துவ முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா். இஜிஎஸ் பிள்ளை கல்வி குழும நிறுவனா் ஜி.எஸ்.பிள்ளையின் 96-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

