நாகப்பட்டினம்
தவறவிட்ட 4 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
நாகூரில் கீழே தவற விட்ட 4 பவுன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் பாராட்டு
நாகூரில் கீழே தவற விட்ட 4 பவுன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாருக்கு காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
நாகூா் கொல்லம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சுமையா திட்டச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று, ஆட்டோவில் வீடு திரும்பும்போது மரக்கான்சாவடி அருகே தனது கைப்பையை 4 பவுன் நகையுடன் தவறவிட்டுள்ளாா்.
இது குறித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையிலான போலீஸாா் மரக்கான்சாவடியில் இருந்து திட்டச்சேரி வரையிலான கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, 3 மணி நேரத்துக்குள் 4 பவுன் நகையை மீட்டு சுமையாவிடம் ஒப்படைத்தனா்.
நகை தவற விட்ட புகாரில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு நாகை எஸ்பி பாராட்டு தெரிவித்தாா்.
