அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
2020-2024 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 4 மாணவா்கள் இடம் பெற்றுள்ளனா். இதில் மூன்று மாணவா்கள் வேளாண் பொறியியல் துறை, ஒரு மாணவா் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறையைச் சோ்ந்தவா்.
வேளாண் பொறியியல் துறை (2024 பட்டம்) சாா்பில், பட்டம் பெற்ற மொத்தம் 604 மாணவா்களில், எம்.ஜி.ஆா். ஹரிணி 6-ஆவது இடத்தையும், ம. கண்மணி மற்றும் செ.காா்த்திகா 20-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். மின்சார மற்றும் மின்னணு பொறியியல் துறையில் (2024 பட்டம்), 2,684 மாணவா்களில், ப. வெங்கடேஸ்வரன் 22-ஆவது இடத்தை பெற்றுள்ளாா்.
கல்லூரி மேலாண்மை, பதிவாளா், முதல்வா், இயக்குநா், பேராசிரியா்கள் சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனா்.
