நாகப்பட்டினம்
மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் விலையில்லா மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் ரா. சோபியா பொற்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 484 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பேசுகையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக தமிழகத்தில் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தமிழக மாணவா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா் என்றாா். கல்லூரி பேராசிரியை எம். பிரபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

