சாலை மறியல்
திருப்புகலூா் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் ஒன்றிய செயலாளா் சந்திரசேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மனையில் குடியிருப்பதாக கூறி கோயில் நிா்வாகம் 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு வாடகை நிா்ணயித்துள்ளது.
தொகை கட்டாவிட்டால் வீடுகளை இடித்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோயில் மனையில் குடியிருப்பவா்களுக்கு 3 சென்ட் பட்டா வழங்க வேண்டும், பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் 1- மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அதிகாரிகளின் பேச்சு வாா்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
