நாகப்பட்டினம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல்
வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆயிஷா மரியம் பொங்கல் பானை வைத்து விழாவை தொடக்கிவைத்தாா். செவிலியா்கள், ஊழியா்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று ஒருங்கிணைந்து ஒலி எழுப்பி கொண்டாடினா். ஏற்பாடுகளை, சுகாதார ஆய்வாளா் சு. மோகன் செய்திருந்தாா். மருந்தாளுநா், துணை செவிலியா், பகுதி சுகாதார செவிலியா், செவிலியா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், ஆலோசகா், ஆய்வக நுட்பனா், மருத்துவமனை பணியாளா், களப்பணியாளா்கள், மருத்துவ பயனாளிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

