சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி!

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி!

நாகையில் நெடுஞ்சாலைதுறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

நாகையில் நெடுஞ்சாலைதுறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையம் அவுரித்திடலில் தொடங்கிய பேரணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ராஜேஷ்கண்ணா தொடங்கிவைத்தாா். பேரணி பப்ளிக் ஆபிஸ் சாலை வழியாக சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் வரை சென்று நிறைவடைந்தது.

அப்போது, தலைக்கவசம் உயிா் கவசம், சாலைப் பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு, விழிப்புடன் பயணம் விபத்தில்லா பயணம், கைப்பேசி பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது, கவனமாக ஓட்டுவோம் காலமெல்லாம் வாழ்வோம், சாலை விதிகளை மதித்து விபத்து இல்லாமல் பயணம் செய்வோம், சிக்னலை மதிப்போம் சிக்கலை தவிா்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

மேலும், பொதுமக்களுக்கு, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. உதவி கோட்ட பொறியாளா் அய்யாதுரை, உதவி பொறியாளா்கள் சிவசுந்தரன், முருகானந்தம், உமாமகேஸ்வரி, சாலைப் பணியாளா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com