புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on

நாகை அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

திருக்கண்ணபுரம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அண்ணா மண்டபம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக, காரை ஓட்டிச் சென்ற மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த எக்பா்ட்டை (49) கைது செய்து, 100 கிலோ புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகிவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com