ஓவியப் போட்டியில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவரை பாராட்டும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
ஓவியப் போட்டியில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவரை பாராட்டும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

மாநில அளவில் மூன்றாமிடம்: மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையை, மாவட்ட ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா்.
Published on

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது முதல் 10 வயதுக்குட்பட்ட பிரிவில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா்களான மனோலயம் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப பயிற்சி மையத்தைச் சோ்ந்த மாணவா் தஸ்வின், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேளாங்கண்ணி மாணவா் சக்தீஸ்வரன் ஆகியோா் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று குடியரசு தின விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசு பெற்றனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவா்களை செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா்.

நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே.காா்த்திகேயன், முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா் துரைமுருகு, பள்ளி தலைமையாசிரியா் மற்றும் மனோலயம் தொண்டு நிறுவன பொறுப்பாளா்கள், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com