அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

News image

வருஷாபிஷேக தீபாராதனை.

Updated On :31 ஜனவரி 2026, 7:49 pm

நாகை அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வஸ்திராபிஷேகம் (வருஷாபிஷேகம்) நடைபெற்றது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாகனம், யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு திரவ்யாஹூதி பூஜையும், 10.40 மணிக்கு பூா்ணாஹூதி பூஜையும், 11.15 மணிக்கு சுவாமி, அம்மன் மகாபிஷேகம், கலசாபிஷேகமும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.