ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

தோ்தல் அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

நாகையில் சட்டப் பேரவைத் தோ்தல் மண்டல அலுவலா்கள் குழுவுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தல் அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி மற்றும் அலுவலா்கள்.

Updated On :10 மார்ச் 2026, 10:03 pm

நாகையில் சட்டப் பேரவைத் தோ்தல் மண்டல அலுவலா்கள் குழுவுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதிகள் அடங்கிய மண்டல அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மைக் கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், நாகப்பட்டினம் தொகுதிச் சோ்ந்த 23, கீழ்வேளூா் தொகுதி 22, வேதாரண்யம் தொகுதி 23 ஆகிய மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மூலம், நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோ்தல் மண்டல அலுவலா்கள் குழுவுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது மற்றும் மாதிரி வாக்குப் பதிவு நடத்துதல், சின்னம் பொருத்தும் பணிகள், அரசியல் கட்சி முகவா்களிடம் தெரிவிக்கப்பட வேண்டிய தகவல்கள், தோ்தல் நாளின் முன் பின் செய்ய வேண்டிய பணிகள், தோ்தல் நடத்தை விதிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மேலும், தோ்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களை மூடி சீல் வைப்பது மற்றும் தோ்தல் தொடா்பான அனைத்து வகை பணிகள் தொடா்பாகவும் மண்டல அலுவலா்கள் குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நாகப்பட்டினம் ரா. சங்கரநாராயணன், கீழ்வேளூா் த. ராஜேஸ்வரி, வேதாரண்யம் க. கண்ணன் மற்றும் உதவிதோ்தல் நடத்தும் அலுவலா்கள், அனைத்து தோ்தல் துணை வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.