புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நாகையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் லாரிகள்: நெல் கொள்முதல் பணிகளில் மந்தம்

நாகையில் நெல் மூட்டைகளுடன் ஒரு வாரத்துக்கும் மேலாக லாரிகள் காத்திருப்பதால் நெல் கொள்முதல்

News image

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 8:53 pm

நாகப்பட்டினம்: நாகையில் நெல் மூட்டைகளுடன் ஒரு வாரத்துக்கும் மேலாக லாரிகள் காத்திருப்பதால் நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணி தொய்வடைந்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டில் 1. 70 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிசெய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சாா்பில் நெல் கொள்முதல் செய்ய மாவட்டத்தில் 174 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரசு கிடங்குகள், தற்காலிக சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதேபோல, கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அரவைக்காக ரயில்கள் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து போதிய அளவு ரயில் வேகன்கள் இல்லாததால் நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாகை புத்தூா் புறவழிச்சாலையில் நீண்ட வரிசையில் நிற்கின்றன. அப்பகுதியில் 250 க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். அதிக லாரிகள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

நெல்முட்டைகளை தொடா்ந்து இறக்குவதற்கு சரியான முறையில் சீட்டு வழங்காததால், லோடு ஏற்றி வந்த லாரிகள் புத்தூா் ரவுண்டானா பகுதியில் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓட்டுநா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு லோடு இறக்கி மீண்டும் ஏற்றுவதற்கு 5 நாள்கள் வரை ஆகிறது. வாகன உரிமையாளா்களுக்கும் குறைந்த வாடகையே கிடைக்கிறது. மேலும் திடீரென மழை பெய்தால் லாரிகளில் ஏற்றியுள்ள நெல் மூட்டைகள் நனைந்து ஈரமாகி தரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

எனவே, தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் லாரிகளுக்கு சீட்டு வழங்கினால் நெல் தேங்காமல் இருக்கும். மேலும் நெல் கொண்டு செல்ல கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டால் சிரமங்கள் தவிா்க்கப்படும் என்று லாரி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.