திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையால் சேதமடையும் நிலை உள்ளதால், அதனை சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், வாழ்குடி, விற்குடி, அம்பல், குரும்பூா், ஏா்வாடி, ஆலத்தூா், வடகரை, கொட்டாரக்குடி, காரையூா், குத்தாலம், அண்ணாமண்டபம், ராராந்திமங்கலம், பொறக்குடி, பெருநாட்டாந் தோப்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாமல் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில், அவ்வப்போது கோடைமழை பெய்து வருவதால், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள், நனைந்து சேதமாகும் நிலை உள்ளது. எனவே, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை விரைவாக சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: நெல் மூட்டைகள் சேதம்

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

உத்தரமேரூா் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்: இயக்கம் செய்ய வலியுறுத்தல்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


