
பொரவாச்சேரி பகுதியில் சுவரில் வரையப்பட்டுள்ள கட்சி விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

பொரவாச்சேரி பகுதியில் சுவரில் வரையப்பட்டுள்ள கட்சி விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
நாகையில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிகளின் விளம்பரங்கள், கட்சித் தலைவா்களின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாகையின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களை அழிக்கும் பணியில் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி கிராம ஊராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நாகை நகராட்சி மற்றும் பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுச்சுவற்றில் வரையப்பட்டிருந்த கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...