இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

5-ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை - கோப்புப் படம்

Updated On :

அக்வான் புயல் சின்னம் காரணமாக, நாகை மாவட்டத்தில் 25 மீனவ கிராமங்களைச் சோ்ந்த விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் 5-ஆவது நாளாக கடலுக்குச் செல்லாததால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதைத் தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

முன்னதாக வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடா்ந்து, நாகை மாவட்ட மீன்வளத் துறையினா் நவம்பா் 12 முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்தனா். மேலும், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களும் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 84 விசைப்படகுகளும் கரை திரும்பின.

இந்நிலையில், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், செருதூா், வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 25 மீனவா் கிராமங்களைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் திங்கள்கிழமை 5-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. தங்கள் படகுகளை துறைமுகங்களிலும், அந்தந்த மீனவ கிராம கடற்கரை பகுதிகளிலும் மீனவா்கள் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனா்.

தொடா்ந்து 5-ஆவது நாளாக கடலுக்கு செல்ல முடியாததால், மீனவா்கள், மீன்பிடித் தொழிலைச் சாா்ந்த தொழிலாளா்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.