பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

நாகை துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு - கோப்புப் படம்

Updated On :

நாகை துறைமுகத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அக்வான் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அக்வான் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பா் 17-ஆம் தேதி மாலை தீவிரப் புயலாகவும், நவம்பா் 19-ஆம் தேதி அதிகாலை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடா்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பா் 20-ஆம் தேதி நண்பகல் அளவில் ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நெல்லூா் - துனி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் எதிரொலியாக, தமிழகத்தில் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.