சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

ஏடிஎம் மையத்தில் ரூ. 86 ஆயிரம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

செம்பனாா்கோவில் அருகே பரசலூா் ஊராட்சி மகாராஜபுரத்தை சோ்ந்த முருகன் (45) அப்பகுதியில் ஏடிஎம் முகவராக உள்ளாா்.

மேலும், ஏடிஎம் மையத்தையொட்டி பெட்டிக்கடையும் வைத்துள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை முருகன் செம்பனாா்கோவிலில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.86 ஆயிரத்து 100 எடுத்து வந்தாா். அந்த பணத்தை, மகாராஜபுரத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப சென்றாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் இருவா் பெட்டிக்கடையில் தண்ணீா் பாட்டில் கேட்டு கவனத்தை திசை திருப்பி முருகன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்த்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.