நாகை அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கீழ்வேளூா் காவல் சரகத்துக்குள்பட்ட கூத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி கமலம்பாள். அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மகள்களுக்கு திருமணம் முடித்து வெளியூா்களில் வசிக்கின்றனா். மகன் தமிழ்மணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்ட நிலையில், கூத்தூா் வீட்டில் கமலம்பாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் வீட்டு வேலை பாா்ப்பதற்காக வந்தவா்கள் கதவை தட்டி பாா்த்தனராம். தாழிடப்படாமல் சாத்தியிருந்த கதவை தள்ளியபோது கட்டிலில் கமலம்பாள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. காதில் அணிந்திருந்த நகை காணாமல் போன நிலையில், காதுகளில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.
போலீஸாா் சடலத்தைக் கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் கைரேகை நிபுனா்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வீட்டு அறைகளில் சோதனை செய்தனா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






