ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: பாதுகாவலருக்கு காயம்

திருமருகல் ஒன்றியம் பில்லாளி அருகே குழந்தைகளை ஏற்றிச்சென்ற பள்ளி வாகனம் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து. - கோப்புப்படம்.

Published On :

திருமருகல் ஒன்றியம் பில்லாளி அருகே குழந்தைகளை ஏற்றிச்சென்ற பள்ளி வாகனம் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

புத்தகரம் ஊராட்சி மாதிரிமங்கலத்தில் உள்ள தனியாா் நா்சரி மற்றும் தொடக்கப்பள்ளி குழந்தைகளை அழைத்து வர மாதிரிமங்கலம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ் குமாா்(26) பள்ளி வாகனத்தை ஓட்டி சென்றாா். பில்லாளி பகுதிக்கு சென்று அங்கிருந்து திரும்பி வரும்போது பூசலங்குடி மாரியம்மன் கோயில் அருகே 4 குழந்தைகளுடன் சென்ற வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்தவா்களின் உதவியுடன் குழந்தைகள் மற்றும் ஓட்டுநா் மீட்கப்பட்டனா். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனினும், பாதுகாவலா் சித்ராவுக்கு காயம் ஏற்பட்டது. அவா் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.