நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

பயணிகள் ரயில் சேவை தொடக்கம்மயிலாடுதுறை

Updated On :13 மே 2013, 1:46 am IST

மயிலாடுதுறை - திருவாரூர் அகல ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் விரைவு ரயில்கள் மட்டுமே  இயக்கப்பட்டு வந்தன. இந்தப்  பாதையில் மங்கைநல்லூர், பூந்தோட்டம், சன்னாநல்லூர்  உள்ளிட்ட  ரயில் நிலையங்களில் நின்று  செல்லும் வகையில்  பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக பாஜக வழக்குரைஞர் கே. ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் 7.35 மணிக்கு திருவாரூரை சென்றடைந்தது.

திருவாரூர் - மயிலாடுதுறை: திருவாரூர்-மயிலாடுதுறை இடையே ஞாயிற்றுக்கிழமை பயணிகள் ரயில் சேவை தொடங்கியது.

திருவாரூர்- மயிலாடுதுறை இடையே நாள்தோறும் காலை, மாலையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு திருவாரூர் ரயில் நிலையத்துக்கு வரும் இந்த ரயில், திருவாரூரிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

இதே போல மாலை 6.10 மணிக்கு மயிலாடுதுறையிலிருந்தும், இரவு 8.40 திருவாரூரிலிருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.