சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

சிறு படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி

: காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டம் தளர்த்தப்பட்டு சிறு படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை

Updated On :13 மே 2013, 1:46 am IST

: காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டம் தளர்த்தப்பட்டு சிறு படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. இருப்பினும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி மே 17-ம் தேதி காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 26 பேர் கடந்த ஏப்.5-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறு படகு (பைபர்) மீனவர்கள் வேலை நிறுத்தம், 

ரயில் மறியல் போராட்டம், மீன் விற்பனை புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தினர்.

இந்த நிலையில், சிறு படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில்கொண்டு, சனிக்கிழமை முதல் அந்தப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சந்தைக்கு கோலா மீன்கள் விற்பனைக்கு வந்தன.

இருப்பினும் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள், வரும் 17-ம் தேதி காரைக்காலில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.