பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

சாலையை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்

சாலையை சீரமைக்கக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள மாங்குடி கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சாலையை சீரமைக்கக் கோரி, திருவாரூர் அருகேயுள்ள மாங்குடி கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அருகே பாண்டவையாறு பாலம் முதல் புலிவலம் வரை மிகவும் மோசமான நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து, அலுவலர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை சாலை சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பாண்டவையாறு முதல் புலிவலம் வரை பள்ளமும், மேடாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே சாலைப் பணிகள் வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாத அரசு அலுவலர்களைக் கண்டித்து திருவாரூர் அருகேயுள்ள மாங்குடி கடைத் தெருவில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற மறியலில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், சாமியப்பன், இடும்பையன், ஒன்றியச் செயலர் மாதவன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தகவலறிந்த தாலுகா காவல் நிலையப் போலீஸார், நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.