ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் காரல்மார்க்ஸ் 200 -ஆவது ஆண்டு விழா

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:00 am

DIN

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் காரல்மார்க்ஸ் 200 -ஆவது ஆண்டு விழா மற்றும் நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார்.
காரல்மார்க்ஸ் நினைவு தின கொடியை தீக்கதிர் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.ஏ. பெருமாள் ஏற்றி வைத்து, காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு மற்றும் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட யுக்திகள் குறித்துப் பேசினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, ஆர். குமாரராஜா, சி. ஜோதிபாசு, கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.என். தங்கராசு, சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், எம்.பி.கே. பாண்டியன்,  கே. பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் கே. கோபு, ஒன்றியச் செயலாளர்கள் கே.என். முருகானந்தம், கே.வி. ராஜேந்திரன், எல். சண்முகவேல்  உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியத்திலிருந்து 500 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.