தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:05 pm

DIN

நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
இதை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவு சுவாமி புறப்பாடு  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 25-ஆம் தேதி சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. வரும் 27 -ஆம் தேதி  விடையாற்றியுடன் கந்த சஷ்டி விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தா. அரவிந்தன், தக்கார் ரா. சுகுமார் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.
இதேபோல், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில்,  கோகமுகேசுவரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இந்த கோயில்களிலும் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.