திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் புதன்கிழமை (ஏப். 18) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறகிறது.
இந்த முகாமில் டி.சி.எஸ்., விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதுகுறித்து கல்லூரி முதல்வர் கனகசபேசன் கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளையின் சார்பாக வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறோம். இதுவரை நடைபெற்று முடிந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 1000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பினைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது நடைபெற உள்ள முகாமில் 500 -க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்குத் தேர்வு செய்ய உள்ளனர். இவற்றில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 5 புகைப்பட நகல், ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்கள் 5 கொண்டு வருதல் வேண்டும். முகாமில் கலந்துகொள்பவர்கள் பதிவுக் கட்டணமாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


