தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நெகிழி பயன்பாட்டுக்குத் தடை: விழிப்புணர்வு முகாம்

தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமசுப்பு தலைமை வகித்துப் பேசுகையில், அனைத்து தடிமன்களிலும், அனைத்து அளவுகளிலும் நெகிழிப் பைகள், உறிஞ்சுகள் (ஸ்ட்ரா), குவளை, கோப்பை, தட்டு, தண்ணீர் பாக்கெட், தாள், மேசை விரிப்புகள் ஆகியவற்றை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. நெகிழிக்கு மாற்றாக துணிப்பை, சணல் பை, காகிதப்பை, மேசை விரிப்புகள், வாழை இலை, பாக்கு இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் வளத்தையும், சுற்றுச்சூழலையும் பேண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இதில், நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் சந்திரசேகரன், மேலாளர் அ. லெட்சுமணன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் க. மணாழகன், சுகாதார ஆய்வாளர் கோ. ராஜேந்திரன் மற்றும் வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.