விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்புப் போராட்டம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி

Updated On :25 டிசம்பர் 2018, 6:14 am IST

திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி 11 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம், அம்மனூர், வேளூர், கோமல், மணலி உள்ளிட்ட 11 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பாக இந்தப் போராட்டம் நடை
பெற்றது.
இப்போராட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும், சேதமடைந்த தென்னை, மா, பலா, வாழை மரங்களை உரிய முறையில் கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கச்சனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.