விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்க வலியுறுத்தல்
விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்திலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யும் கால கட்டத்துக்குள் உரிய தண்ணீரை பெற்றுத்தராததால், 2 லட்சம் ஏக்கர் நெற் பயிர்கள் கருகியுள்ளன. மேலும், சேதத்தின் அளவு அதிகரிக்கும் முன்பு தேவையான அளவு தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மார்ச் 28 முதல் 31-ஆம் தேதி வரை மன்னார்குடியில் நடைபெறவுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாட்டு பேரணியில் மன்னார்குடி ஒன்றியத்திலிருந்து 6,000 பேர் பங்கேற்பது, 2016-2017-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்து, இழப்பீடு பட்டியலில் இடம் பெறாதவர்களை உடனடியாக பட்டியலில் இணைத்து காப்பீடு இழப்பீட்டுத்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி. முனியாண்டி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, நகரச் செயலர் வி. கலைச்செல்வம், விவசாய சங்க ஒன்றியச் செயலர் ஆர். சதாசிவம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என். மகேந்திரன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் ப. பாஸ்கரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், துண்டக் கட்டளை கிளை சார்பில் கட்சியின் மாநில மாநாட்டு நிதியை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதனிடம் கட்சி கிளைச் செயலர் வி. பழனிமலை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...