ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாரண மாணவ, மாணவியருக்கான திரளணி பயிற்சி முகாம்

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பாரத சாரண, சாரணியர்களுக்கு ஒரு நாள் திரளணி பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:16 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பாரத சாரண, சாரணியர்களுக்கு ஒரு நாள் திரளணி பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சாரண, சாரணியர் இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் இரா. செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட சாரணிய ஆணையர் எஸ். கல்யாணி, மாவட்ட செயலாளர் ஆர். மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் பொ. சக்கரபாணி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் பூ. திருமாறன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் கயிறு பிடித்து ஏறுதல், தீக்குழி தாண்டுதல், பந்து எறிதல், மேடையில் பாடுதல்,  ஓவியம் வரைதல் உள்ளிட்ட 10 தலைப்புகளில் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வாரியாக  முதலுதவி, அணி நடை, திசை காட்டுதல் உள்ளிட்ட ஐந்து தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன.
 சாரணர் பிரிவில் நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும்,  இரண்டாமிடத்தை திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், மூன்றாம் இடத்தை நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியும் பெற்றன. சாரணியர் பிரிவில் முதலிடத்தை திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாமிடத்தை திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், மூன்றாம் இடத்தை நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியும் பெற்றன.
அதிக எண்ணிக்கையில் சாரண, சாரணியர்களைப் பங்கெடுக்க செய்ததில் 93 சாரண சாரணியர்களுடன் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், 76 சாரணியர்களுடன் கலந்து கொண்ட திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், 69 சாரண, சாரணியர்களுடன் கலந்துகொண்ட நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றது. மாவட்ட சாரண ஆணையர் ஆர். மணிவண்ணன் சாரண, சாரணியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி பேசினார்.  ஏற்பாடுகளை பண்டக காப்பாளர் ஏ.அறிவு, பயிற்சியாளர்கள் எஸ். இளையராஜா, எம். அய்யம்பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
முகாமில் மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் மோகன், சாரணிய அமைப்பு ஆணையர் கவிதா,  சாரண ஆசிரியை ராஜலெட்சுமி,  உடற்கல்வி இயக்குநர் பாலமுருகன் மற்றும்  32 பள்ளிகளைச் சேர்ந்த 848  சாரணர், சாரணியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.