ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மாசி மகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

மாசி மகத்தை முன்னிட்டு குடவாசல் வட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:20 pm

DIN

மாசி மகத்தை முன்னிட்டு குடவாசல் வட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் வட்டம், எண்கண் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதேபோல், 108 திவ்ய தேசங்களில் 27-ஆவது தலமான திருக்கண்ணமங்கை பக்தவச்சலப்பெருமாள் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.  பக்தவச்சலப்பெருமாள்(உத்ஸவர்) கோயில் உள்பிராகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில கருட வாகனத்தில் எழுந்தருளினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.