திருவாரூர் அருகேயுள்ள வைப்பூர் ஊராட்சியில், நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், 68 பயனாளிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் புதன்கிழமை வழங்கினார்.
வைப்பூரில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கி ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வகையில், திறந்தவெளியில் மலம்கழிப்பதை தவிர்த்து, சுகாதாரத்துடன் வாழ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்காத ஊராட்சிகளின் பட்டியலில் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, இணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

