தஞ்சை மாவட்ட விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையா என, புகழாரம் சூட்டினார் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ. சிவசாமி.
நான்கு முறை சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.கே. சுப்பையா நினைவுதினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சித்தமல்லியில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்திய பின், ந.உ. சிவசாமி மேலும் பேசியது:
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையாள்களாக, ஆண்டான் அடிமை என்ற முறைகளினால் நிலச்சுவான்தார்களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தபோது, அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுத்துவர் ஏ.கே. சுப்பையா.
மேலும் பி. சீனிவாசராவ், மணலி கந்தசாமி, களப்பாள் குப்பு போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றி விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றக் காரணமாக இவர் இருந்தவர் என்றால் அது மிகையாகாது. வீட்டுமனை இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்காக போராடி அவர்களுக்கு வீட்டுமனை கிடைக்க காரணமாகவும் இருந்தவர் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் வி.எஸ்.ஆர். தேவதாஸ், பால. ஞானி, தனராஜ், குமரேசன், ஆர்.டி. சரவணன், பழனியப்பன், மூவலூர் மூர்த்தி, இளையபெருமாள், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் தலையாமங்கலம் பாலு, போலீஸ் பன்னீர், நகரச் செயலர்கள் ஆர்.எஸ். பாண்டியன், வீரா. கணேசன், எம்.எஸ். கார்த்திக், வழக்குரைஞர் அணி மாவட்டச் செயலர் கோ. தர்மராஜ், பழஞ்சூர் செல்வம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!

மந்திராலயம் சென்ற வேன் விபத்து! 8 பக்தர்கள் பலி!
எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

