உலக தேனீக்கள் வளர்ப்பு தினத்தையொட்டி, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு' பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. பாஸ்கரன் கூறியது : அயல் மகரந்தச் சேர்க்கையில் தேனீக்களின் பங்களிப்பை தெரிவித்து தற்போது தேனீ வளர்ப்புக்கு நல்ல வாய்ப்பு உள்ளதையும், அதை விவசாயிகள் முறைப்படி பராமரித்தால் பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும் என்றார்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ், உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள், தேனீக்களின் சிறப்பியல்புகள், தேனீப் பெட்டி வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்கள், தேனீக்கள் தங்களுக்குள் மகரந்தம் இருக்கும் இருப்பிடத்தை தெரிவிக்கும் நடன முறைகள், தேனீக்களைப் பராமரிக்கும் முறைகள், தேனீக்களை கையாளும் விதம் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 40 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் தேனீ வளர்ப்பு' குறித்த கையேடு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

