கூத்தாநல்லூர் வட்டாரத்தில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, பெருமாள், அனுமன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள லெட்சுமாங்குடி-கொரடாச்சேரி பிரதான சாலையில் எழுந்தருளியுள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஜெயசக்தி ஆஞ்சநேயருக்கு, சனிக்கிழமை இரவு சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல், கூத்தாநல்லூர் அருகேயுள்ள வேளுக்குடியில் தெற்கு பார்த்த ஆஞ்சநேயர், மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதர் லெஷ்மிநாராயணன், சீதா, ராமர், லெஷ்மணன் மற்றும் மூலங்குடி இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான லெஷ்மி நாராயணப் பெருமாள் கோயில் ராம பக்த ஆஞ்ச நேயர், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேசுவரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

திமுக - மமக இடையே கொள்கை உறவு: எம்.ஹெச். ஜவாஹிருல்லா
மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

இந்தியா்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைந்தது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


