ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வேலை நிறுத்த ஆயத்த மண்டல மாநாடு

நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வேலை நிறுத்த ஆயத்த மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:27 pm

நீடாமங்கலத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க வேலை நிறுத்த ஆயத்த மண்டல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு சங்க நிர்வாகி  திருவாரூர் ஜி. மனோகரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் தஞ்சை அ.கா. கோவிந்தராஜ், நாகை பி. பன்னீர்செல்வம், அரியலூர் ப. குப்புசாமி, மாநில அமைப்புச் செயலாளர் வி. நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க மாவட்டச் செயலர் கே. சந்திரசேகரன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் தொடக்கவுரையாற்றினார். சங்க மாநில பொருளாளர் ஆர். கோவிந்தன் கருத்துரையாற்றினார்.
"சங்க தோற்றமும், கடந்து வந்த பாதையும்' என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிவ. ரவிச்சந்திரன், "போராட்டமும் பெற்ற உரிமைகளும்' என்ற தலைப்பில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலர் குரு. சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.
சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் எம். மூர்த்தி, மாநில முன்னாள் அமைப்புச் செயலர் ஜி. தருமையன், வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க நாகை மாவட்டச் செயலர் பி. பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் 15, 700  கிராம உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கீடு செய்து வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் 3000 ரூபாய் போனஸ் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். மாவட்டம்தோறும் காலியாகவுள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவில், சங்க மாவட்ட பொருளாளர் பி.வி. பாண்டியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.