பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி

திருவாரூரில் திங்கள்கிழமை தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை

Updated On :26 பிப்ரவரி 2019, 1:24 am IST

திருவாரூரில் திங்கள்கிழமை தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். 
கண்காட்சியில், தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இலவச சீருடை வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை பெரிய அளவில் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருந்தன. 
இதில், கோட்டாட்சியர் முருகதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. தனபால், வட்டாட்சியர் குணசீலி, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் பொன்வாசுகிராமன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.