ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

நெடும்பலம் அரசுப் பள்ளிக்கு விருது

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 

Updated On :25 பிப்ரவரி 2019, 6:36 am IST

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. 
சென்னையில் அண்மையில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில், நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. விருதை, தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரும், பணி ஓய்வு பெற்ற  முன்னாள் முதல்வரின் தனிச் செயலருமான சிவ. ராஜரத்தினம், தமிழ்நாடு அறக்கட்டளையின் அமெரிக்கத்  தலைவர் சோமாலே சோமசுந்தரம், பணி ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர்  டி.எஸ்.கே. இளங்கோவன் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் தங்கராசுவிடம் வழங்கினர். 
விழாவில் அறக்கட்டளை தலைவர் ராஜரெத்தினம் பேசியது: நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 55 லட்சம் மதிப்பில் 4 வகுப்பறை கட்டடம், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் சைக்கிள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டித் தரப்படுமென உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.