ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை

Updated On :25 பிப்ரவரி 2019, 6:34 am IST

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூரில் அதிமுக அலுவலகம் முன்பு, நகர அதிமுக செயலர் ஆர்.டி. மூர்த்தி தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் அசோகன், ஒன்றியச் செயலர் பி.கே.யு. மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மன்னார்குடியில்...
மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை அருகே ஜெயலலிதா உருவப் படம் வைத்து, மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் டி. கோவிந்தராஜன், மாவட்ட ஜெயலிலதா பேரவை செயலர் பொன். வாசுகிராம், கூட்டுறவு பால் சங்கத் தலைவர் எம்.கே. கலியபொருமாள், மன்னார்குடி மேற்கு ஒன்றியச் செயலர் தமிழ்ச்செல்வம், முன்னாள் நகராட்சி தலைவர் சுதாஅன்புசெல்வன், தஞ்சை மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர் மனோகரன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். முன்னதாக அதிமுகவினர் கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை சந்திப்புக்கு வந்து நிறைவு செய்தனர். 
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக நகரச் செயலர் சண்முகசுந்தரம் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல், அமமுக சார்பில் நகரச் செயலர் தாஜூதீன் தலைமையில் அண்ணா சிலை அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 
அடுத்து, முத்துப்பேட்டை அருகேயுள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் அ. செந்தில்நாதன் தலைமையில் ஒன்றிய அவைத் தலைவர் வீ. இரணியன், குன்னூர் கூட்டுறவு வங்கித் தலைவர் பாரதிதாசன் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னதானம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நீடாமங்கலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை விநியோகித்தனர்.
தொடர்ந்து, நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில், அதிமுக சார்பில் 200-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், அமமுக சார்பிலும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வலங்கைமானில்...
வலங்கைமானில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், அமமுக சார்பிலும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலையணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன. 
சர்க்கரை பொங்கல் வழங்கல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில் லெட்சுமாங்குடி பாலம் அருகே நகரச் செயலாளர் டி.எம். பஷீர் அஹமது தலைமையில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் எல்.எம். முஹம்மது அஷ்ரப், நகரத் துணைச் செயலாளர் எம். உதயகுமார், ஜெ. பேரவை துணைச் செயலாளர் எஸ்.பி. காளிதாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
எஸ். காமராஜ் தலைமையில்...
இதேபோல், அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், கோரையாறு அருகே கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 
தொடர்ந்து, கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் டீ.எம். சின்ன அமீன் தலைமையில், பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.