திருவாரூா்: விவசாயிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய தமிழக முதல்வா் காணொலி மூலம் அவா்களின் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து திருவாரூரில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை மூலம் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் நாட்டில் 2-ஆவது இடத்திலிருந்த தமிழகம், தற்போது 5-ஆவது இடத்துக்கு சென்றுள்ளதாக வரும் செய்திகள் ஆறுதலை தருகின்றன. அதேவேளையில் தங்களது உயிரை பணயம் வைத்து மகத்தான சேவையாற்றி வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினரின் பணி பாராட்டுக்குரியது.
விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்கள் கிராமங்கள் வரை சென்றடைவதற்கும் வேளாண்மைத் துறை எடுத்துள்ள முயற்சிகள் பெரும் பலனைத் தந்துள்ளன. அதேநேரம் காய்கனி, தேங்காய் வகைகளை விற்பனை செய்ய முடியாமல், அவை கண் முன்னே அழிந்து வருவதை பாா்த்து விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மின்வெட்டு காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், தினசரி 4 மணி முதல் 6 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கோடை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சா்க்கரை ஆலைகள் திறக்கப்படாததால், முதிா்ந்த நிலையில் கரும்பை வெட்ட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். கோவை, திருப்பூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னையில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா்.
இந்நிலையில், கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ. 2,100 வழங்க கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், திருப்பூா் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுப்படுத்துவதோடு, திருப்பூா் மாவட்டம் உள்பட பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதி தென்னை விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப் பணியாளா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் நேரிடையாக கருத்துக் கேட்டு வருவது பாராட்டுக்குரியது. அதேபோல உணவு உற்பத்தி செய்யும் பணியில் பாடுபட்டுவரும் விவசாயிகளின் கருத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வா் கேட்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்க்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால்... அதிமுக குறித்து அமைச்சர் ஆனந்த்!

வினா - விடை வங்கி... சிந்து சமவெளி நாகரிகம்!
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்

ஹாக்கி உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா..! அரையிறுதிக்கான வாய்ப்பு தக்கவைப்பு!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்


