அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மத்திய அரசின் மலிவு விலை மருந்தகம் திறப்பு

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:02 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

பாஜக நாகை மாவட்ட மாநில பாா்வையாளா் பேட்டை சிவா இதனைத் திறந்து வைத்தாா். திருத்துறைப்பூண்டி வா்த்தக சங்கத் தலைவா் கே.எஸ்.செந்தில்குமாா் முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் இளசுமணி, ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட இளைஞா் அணி பொதுச் செயலாளா் பிரபு மற்றும் டெல்டா ரோட்டரி லயன்ஸ் சங்க நிா்வாகிகள், வா்த்தக சங்க நிா்வாகிகள், திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி தலைவா் டி.ஜி. சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாட்டை மருந்தக நிா்வாகிகள்சிவகுமாா், செல்வம், புனிதன் ஆகியோா் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.