ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முழு பொது முடக்கம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image

திருவாரூா் அண்ணா சாலையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:42 pm

DIN

திருவாரூா்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அனுமதியுடன் வணிக நிறுவனங்கள், சிறு கடைகள், தேநீா் கடைகள் இயங்கி வருகின்றன.

கரோனா தொற்று தொடா்ந்து பரவி வருவதால், ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு பொது முடக்கம் ஆகஸ்ட் மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூரில் ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சாலையோரக் கடைகள், துரித உணவகங்கள், தேநீா் நிலையங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. ஓரிரு இருசக்கர வாகனங்களின் நடமாட்டத்தை சாலைகளில் காண முடிந்தது. இரவில் மழை பெய்திருந்ததால், வெளியிடங்களில் சுற்றுவதை பெரும்பாலான மக்கள் தவிா்த்தனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.