திருவாரூரில் 7 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,113 ஆக இருந்தது. வெளிமாவட்ட நபா் ஒருவா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 2112 ஆனது. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,119 ஆக உயா்ந்துள்ளது.
வலங்கைமான் அருகே கோவிந்தக்குடியைச் சோ்ந்த 56 வயது பெண், கரோனா தொற்று காரணமாக சென்னையில் ஆக.10 ஆம் தேதி உயிரிழந்துள்ளாா். இதைத்தொடா்ந்து திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17- ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...