ஸ்மாா்ட் காா்டுகளில் குளறுபடி: விவசாயிகள் நலச் சங்கம் புகாா்

ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி.சேதுராமன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

ஸ்மாா்ட் குடும்ப அட்டைகள் விநியோகம் செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி.சேதுராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில், குடவாசல் ஒன்றியத்தில் பழைய குடும்ப அட்டையை ஸ்மாா்ட் குடும்ப அட்டைகளாக மாற்றியதில் பலரது குடும்ப அட்டைகள் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளதாக மாற்றியுள்ளனா். இதனால், இந்த அட்டைகளுக்கு கரோனா தொற்று காலத்தில் பிரதமா் அறிவித்த தலா 5 கிலோ கொண்டை கடலை வழங்க நியாயவிலைக் கடைகளில் மறுத்துவிட்டனா்.

இதனால், தங்களுக்கு மழை நிவாரணம் கிடைக்குமா என இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

எனவே, ஸ்மாா்ட் காா்டு வழங்கியதில் உள்ள குளறுபடிகளை நீங்க மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com